பாடசாலைக் கீதம் அகிலத்தையாளும் அல்லாஹ்வே - உன்னை
அடி தொழ அருளிடு வல்லானே
இருளதை ஓட்டிய தூதர் வழி - எம்மை
இட்டிடச் செய்வாய் நல்லானே
(அகிலத்தை)
அல் - றிபாய் அறிவகம் வளர்ந்திடவே
அரும்பணி புரியும் குரு குலமே
எமதுடல் அகக்கண் திறந்திடவே
எழுத்தெண் சொல்லும் பெருநலமே
(அகிலத்தை)
பெற்றோர் பெரியோர் போற்றிடுவோம்
பெருமைகள் பலவும் பெற்றிடுவோம்
கற்றோர் கருணை கவர்ந்திடுவோம்
கருத்தொருமித்து வாழ்ந்திடுவோம்.
(அகிலத்தை)
உலகினில் உயிரினம் உவந்திடுவோம்
ஊறுகள் செய்வதை உதறிடுவோம்
பாரினில் பிரிவினை போக்கிடுவோம்
பல இன பாஷையும் படித்திடுவோம்
(அகிலத்தை)